×

கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் நெசவாளர்களின் பாதுகாவலனாக முதல்வர் மு.க.ஸ்டாலின் விளங்குகிறார்: திமுக நெசவாளர் அணி நன்றி

சென்னை: தி.மு.க. நெசவாளர் அணி மாநில துணைத்தலைவர் ஓ.ஏ.நாகலிங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கை: பருத்தி மற்றும் நூல் விலை உயர்வால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து தமிநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நெசவாளர்களின் கோரிக்கையை ஏற்று, பருத்தி மற்றும் நூல்விலை குறைக்கப்படுவதற்கான முன்னேற்பாடாக வெளிநாடுகளிலிருந்து நமது தேவைக்கேற்ப பருத்தியை இறக்குமதி செய்யவும், இறக்குமதி வரிக்கு விலக்கு அளிக்கவும் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்தினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஒன்றியஅரசு 30.9.2022 வரை இறக்குமதி செய்யபடுகிற பருத்திக்கு வரி விலக்கு அறிவித்தது.

இந்த குறுகிய கால அளவிற்குள் தேவையான பருத்தியை இறக்குமதி செய்ய இயலாது என்பதை உணர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் 30.9.2022 வரை இறக்குமதிக்கான ஒப்பந்தம் செய்த அனைவருக்கும் பருத்தி கிடைக்கும் வரை வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய  அரசை மீண்டும் வலியுறுத்தி 30.9.2022 வரை இறக்குமதி ஒப்பந்தம் செய்தவர்களுக்கு வரிவிலக்கு பெற்று தந்தார்.  இதன் காரணமாக வரலாறு காணாத வகையில் உயர்ந்த பருத்தி மற்றும் நூல் விலை படிப்படியாக  குறைந்து 104000 வரை விற்கப்பட்ட 1 கேன்டி பருத்தி (355 கிலோ) தற்போது 60000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டிலிருந்து 300 யூனிட் வரையிலும் விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட் வரையிலும், விலையில்லா மின்சாரத்தை உயர்த்தி அளித்ததற்கு நெசவாளர்களின் சார்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தி.மு.க. நெசவாளர் அணி நன்றி கலந்த வணக்கம் தெரிவிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,M.K.Stalin ,DMK , Free electricity for handloom and powerloom weavers Chief Minister M.K.Stalin is the protector of weavers: DMK weavers team thanks
× RELATED தமிழ்நாட்டை மொழி, இனம், பண்பாட்டு...