மீஞ்சூர் பேரூராட்சி 3வது வார்டில் ரூ.8.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை: துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ பூமி பூஜை

பொன்னேரி:  மீஞ்சூர் பேரூராட்சி 3வது வார்டில் ரூ. 8.67 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடைக்கான பூமி பூஜையை துரை சந்திரசேகர் எம்எல்ஏ நடத்தி தொடங்கி வைத்தார்.  மீஞ்சூர் பேரூராட்சி 3வது வார்டு பகுதியில் ரேஷன் கடை கட்டிடம் வேண்டி மீஞ்சூர் பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர் பொன்னேரி எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தார்.  பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 8 லட்சத்து 67 ஆயிரம் நிதி ஒதுக்கினார். அதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது. பூமி பூஜைக்கு துணைத்தலைவர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். திமுக நகர செயலாளர் தமிழ் உதயன் கலந்து கொண்டார்.  சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு பூமி பூஜையை தொடக்கி வைத்தார் .  மீஞ்சூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் அபுபக்கர், நக்கீரன், ஜெயலட்சுமி தன்ராஜ், குமாரி புகழேந்தி, சங்கீதா சேகர், கவிதா சங்கர், கதிர்வேல் கோதண்டம், கரிகாலன், அன்பரசு, சுகுமார், தனராசு, திருப்பதி, சிற்றரசு முப்புராஜ், குருசாலமன், ஒப்பந்தகாரர் ராம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: