×

பிஎன்பி பாரிபா ஓபன்: 2வது சுற்றில் சினியகோவா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கேத்தரினா சினியகோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் ஜெர்மனியின் யூலே நீமயருடன் (23 வயது, 72வது ரேங்க்) மோதிய சினியகோவா (26 வயது, 45வது ரேங்க்) 7-5, 6-4 என்ற நேர் செட்களில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.

விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 59 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் எம்மா ரடுகானு (இங்கிலாந்து), சோபியா கெனின் (அமெரிக்கா) ஆகியோரும் 2வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

Tags : BNP Paribas Open ,Siniakova , BNP Paribas Open: Siniakova in 2nd round
× RELATED பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ்: அல்காரஸ், ஸ்வியாடெக் சாம்பியன்