×

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென்

சென்னை: சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் புது படத்திற்கு ‘கொட்டுக்காளி’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் என்பவர் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான ‘பெப்பில்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர். இந்த படம் பல சர்வதேச விருதுகளை வென்றது.

இந்த படத்தில் நாயகனாக சூரி நடிக்க இருக்கிறார். நாயகியாக அன்னாபென் நடிக்கிறார். நடிகை அன்னாபென் மலையாள திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் ஹிட்டான ‘ஹெலன்’ என்ற படத்தின் நாயகி இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. சக்திவேல் ஒளிப்பதிவில் கணேஷ் சிவா படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.


Tags : Sivakarthikeyan Suri ,Anna Penn , Produced by Sivakarthikeyan Suri, Anna Penn
× RELATED சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி, அன்னா பென்