×

செய்யாற்று படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே செய்யாற்று

படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்தவரை போலீசார் கைது செய்தனர். உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமம் அருகே செய்யாற்று படுகை உள்ளது. இந்த ஆற்றுப்படுகையில் நேற்று முன்தினம் இரவு சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதாக, பெருநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சோதனை செய்ததில், அங்கு மாட்டு வண்டியில் மணல் கொள்ளை நடப்பது தெரியவந்தது.  இதையடுத்து, மணல் கொள்ளையில் ஈடுபட்டிருந்த, வாலிபரை மாட்டு வண்டியுடன் மடக்கிப் பிடித்து, போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், சின்னஏழச்சேரி கிராமத்தை சேர்ந்த ராமதாஸ் (50). இவர், மணல் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.  மேலும், போலீசார் மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய மாட்டு வண்டியினை பறிமுதல் செய்து ராமதாசை கைது செய்து, உத்திரமேரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.



Tags : Seiyaru ,Uttarmerur , A man involved in sand robbery in Seiyaru basin was arrested Uttara Merur: Seiyaru near Uttara Merur
× RELATED செய்யாறு மார்க்கெட் பகுதியில்...