பயிற்சியில் உள்ள கல்லூரி பேராசிரியர்கள் பி.எச்டி வழிகாட்டுனராக பணியாற்றலாம்: பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி

சென்னை: பயிற்சி காலத்தில் உள்ள பேராசிரியர்கள் பி.எச்டி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக பணியாற்றலாம் என்று அகில இந்திய பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி வழங்கியுள்ளது. கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள், தங்களது இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தில், பி.எச்டி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக செயல்பட முடியாது. இரண்டாண்டு பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் பெற்றால் மட்டுமே அவர்கள் பி.எச்டி மாணவர்களுக்கு வழிகாட்டுனர்களாக பணியாற்ற முடியும். இந்த விதிமுறையால், பி.எச்டி வழிகாட்டுனர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பி.எச்டி படிக்கும் மாணவ, மாணவிகள் நாடு முழுவதும் வழிகாட்டுனர்கள் இல்லாமல் தள்ளாடும் நிலைக்கு ஆளாக்கப்பட்டதுடன், ஆராய்ச்சி படிப்புகளின் எண்ணிக்கையும் சரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், அகில இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவான யு.ஜி.சி. பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ‘‘உயர்கல்வி நிறுவனங்களில் நிரந்தர பணியில் சேரும் ஆசிரியர்கள். தங்களின் பயிற்சி காலத்திலும், பி.எச்டி. வழிகாட்டுனராக செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே பயிற்சியில் உள்ள பேராசிரியர்களை வழிகாட்டுனர்களாக செயல்பட பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகங்கள் அனுமதிக்கலாம்’’ என தெரிவித்துள்ளது.

Related Stories: