×

சென்னையில் இன்று அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும். இதுதொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாளை(மார்ச் 11) சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்படுமாறும் மேலும் 13.03.2023 அன்று தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத்தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்யுமாறும் அனைத்து உயர்மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai ,District Chief Education Officer , All schools will function as usual in Chennai today: District Chief Education Officer announced
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்