×

ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு: ப.சிதம்பரம் பேட்டி!

சிவகங்கை: ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தவறு என்று முன்னாள் ஒன்றிய அமைச்ச்ர் பசிதம்பரம் கூறினார். சிவகங்கை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி மற்றும் மருதுபண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது எம்.பி நிதியில் நூலகம் அமைத்துள்ளார். இதனை இன்று மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி ரத்து செய்வதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையது அல்ல. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பியதை அவர் திருப்பி அனுப்பியது தவறு.

தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் ஆன்லைன் ரம்மி தடை மசோதா சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும் எனவும், குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றுவது மாநில அரசின் உரிமை யாகும். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் ஒரு குற்றவியல் சட்டம் மேலும் வெளி மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவது என்பது புது புரளி என்றும் இந்த புது புரளியை பாஜக, ஆர். எஸ்.எஸ் தூண்டிவிடுகின்றது.

தமிழ்நாட்டில் வாழும் வெளி மாநிலத்தவருக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் கிடையாது. வதந்திகளை பரப்புவோர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜக தமிழகத்தில் வளர்ச்சி அடைந்திருப்பது என்பது வளர்ச்சி அல்ல அது வீக்கம் என்றும் வளர்ச்சி வேறு வீக்கம் என்பது வேறு பாஜக தவறான பிரச்சாரங்களின் மூலம் தமிழகத்தில் வளர முயற்சிக்கின்றது. இது தமிழகத்தில் எடுபடாது எனவும் கூறியுள்ளார்.


Tags : Governor ,P. chidambaram , Governor's return of online rummy ban bill was wrong: P Chidambaram interview!
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி