×

சோலையார் அணை நீர்மட்டம் 18 அடியாக சரிந்தது: மண் திட்டாக காட்சியளிக்கிறது

வால்பாறை: வால்பாறை சோலையார் அணை நீர்மட்டம் 18 அடியாக சரிந்து, மண் திட்டாக காட்சியளிக்கிறது. கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையார் அணை பிஏபி பாசன திட்ட அணைகளில் முக்கிய அணையாகும். மழை காலங்களில் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து வரும் நீரை, பரம்பிக்குளம் அணைக்கு அனுப்பும் தண்ணீரில் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது நிலவும் கடும் வெயில் மற்றும் மழை இன்மை காரணமாக சோலையார் அணை நீர்மட்டம் சரிந்தள்ளது. தற்போது அணையில் மீன்கள் உயிர் வாழ மட்டுமே தண்ணீர் பயன்படுகிறது.

165 அடி நீர் மட்டம் உள்ள அணையில் தற்போது 18 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது. வினாடிக்கு 30 கன அடி நீர் மட்டுமே அணைக்கு வரத்து உள்ளது. அணையில் 560 மில்லி கன அடி நீர் மட்டுமே இருப்பு உள்ளது. இதனால் அணையின் பெரும்பாலான இடங்கள் மண் திட்டாக காட்சி அளிக்கிறது. விரைவில் கோடை மழை பெய்யும் என நம்பப்படுகிறது. பிப்ரவரி இறுதி வாரத்தில் பெய்ய வேண்டிய மழை பொய்த்ததால் அணை நீர்மட்டம் சரிந்தது. வரும் காலங்களிலாவது மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.

Tags : Solaiyar , Solaiyar dam water level falls to 18 feet: Mudflats present
× RELATED பிஏபி திட்ட நீர்மின் நிலையத்திற்காக...