×

சென்னையில் போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை: சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!

சென்னை: சென்னையில் போதை பொருட்கள் கடத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கபப்டும் என காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், “போதை தடுப்புக்கான நடவடிக்கை” மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 03.03.2023 முதல் 09.03.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 40 குற்றவாளிகள் கைது. 103 கிலோ கஞ்சா, 38.6 கிலோ கஞ்சா சாக்லேட்டுகள், 9 கிராம் மெத்தபெடமைன், 300 LSD ஸ்டாம்புகள், 5 கஞ்சா செடிகள், 198 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 15 செல்போன்கள், ரொக்கம் ரூ.1,11,990,/-, 6 இருசக்கர வாகனங்கள் மற்றும் 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக, R-2 கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 04.03.2023 அன்று காலை சூளைமேடு, சுபேதார் கார்டன் அருகே கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.அம்பேத்கர், வ/23, த/பெ.4.ஜீவராஜ், 7வது பிளாக், சுபேதார் கார்டன், கோடம்பாக்கம், 2.சூர்யபிரகாஷ், வ/20, த/பெ.ஆதித்யன், மூப்பன் மேஸ்திரி 1வது தெரு, கோடம்பாக்கம், 3.மோகன், வ/25, த/பெ.பெருமாள், சுபேதார் கார்டன், சூளைமேடு, கோடம்பாக்கம் ஆகிய3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 21.7 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 04.03.2023 அன்று அண்ணசாலை, பார்டர் தோட்டம், செல்லப்பிள்ளையார் கோயில் தெரு, மாநகராட்சி பூங்கா அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த 1.பானுமதி (எ) உஷா, வ/40, க/பெ.சரவணன், எண்.16/35, அங்காளம்மன் கோயில் தெரு, சூளை, சென்னை 2.மைக்கேல் பேகர், வ/21, த/பெ.ஜார்ஜ் பேகர், எஸ்.எஸ்.புரம், 7வது தெரு, புரசைவாக்கம், சென்னை 3.சந்தோஷ்குமார், வ/20, த/பெ.சுகுமார், எண்.146, புது வாழைமா நகர், கிருஷ்ணதாஸ் நகர், ஓட்டேரி, சென்னை 4.இம்மானுவேல், வ/21, த/பெ.ஜெபஸ்டீன், எண்.26, எல்.ஜி.என் ரோடு, அண்ணாசாலை, சென்னை, 5.முகமது அப்துல்லா, வ/24, த/பெ.கமல்பாட்ஷா, எண்.9/43, திருநாவுக்கரசு தெரு, ஜாம்பஜார், திருவல்லிக்கேணி, சென்னை ஆகிய 5 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 கிலோ 165 கிராம் கஞ்சா, ரொக்கம் ரூ.9,640/-, 5 செல்போன்கள் மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

N-3 முத்தியால்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 03.03.2023 அன்று ஸ்டான்லி ரவுண்டானா அருகே சட்ட விரோத விற்பனைக்காக LSD ஸ்டாம்புகள் மறைத்து வைத்திருந்த 1.சக்திவேல், வ/30, த/பெ.சந்திரன், எண்.15, ஆதித்யா நகர், ஆனந்த் அவென்யூ, மாடம்பாக்கம், சென்னை 2.ஷ்யாம் சுந்தர், வ/30, த/பெ.கந்தசாமி, எண்.38, விவேகானந்தர் தெரு, பி.வி.ஆர் நகர், ஆழ்வார் திருநகர், சென்னை, 3.நரேந்திரகுமார், வ/26, த/பெ.சீனிவாசன், எண்.50, போகிப்பாளையம், பட்டாளம், சென்னை 4.ஶ்ரீகாந்த், வ/22, த/பெ.ராஜசேகர், எண்.29/11, பெருமாள் கோயில் கார்டன் தெரு, சென்னை ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 300 LSD ஸ்டாம்புகள், 5 கஞ்சா செடிகள், 4 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 1 கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவல்லிக்கேணி, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Triplicane) காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 06.03.2023 அன்று அயனாவரம் பஸ் டிப்போ அருகே சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த பிரதீப்குமார், வ/29, த/பெ.தனசேகர், எண்.73, மேட்டுத் தெரு, அயனாவரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 13.5 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 06.03.2023 அன்று வெங்கடேசன் 2வது தெரு, அண்ணாசாலை என்ற முகவரியிலுள்ள வீட்டில் குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பதுக்கி வைத்திருந்த கஸ்ரத்தூரி, வ/28, த/பெ.நுனாசௌர் டோரி, கட்டோரியா அஞ்சல், பீஹார் மாநிலம் என்பவரை கைது செய்து, 38.6 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 25 கிலோ எடை குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்தனர்.

R-4 சௌந்தரபாண்டியனார் அங்காடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 07.03.2023 அன்று, தி.நகர், மாம்பலம் நெடுஞ்சாலை மற்றும் பசூல்லா சாலை சந்திப்பு அருகே கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் குட்கா புகையிலை பாக்கெட்டுகள் வைத்திருந்த லஷ்மிதர் மஹந்தா, வ/38. த/பெ.ஜோகேஸ்வர் மஹந்தா, பலுபாரா, மயூல்பஞ்ச், ஒடிசா என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 8.4 கிலோ எடை கொண்ட கஞ்சா சாக்லேட்டுகள் மற்றும் 24.46 கிலோ எடை கொண்ட பிளாக் லேபிள், டொபாக்கோ, விமல், சபல், ஹுக்கா பேஸ்ட் உள்ளிட்ட குட்கா புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 07.03.2023 அன்று மதியம், மடிப்பாக்கம், ராம்நகர் வடக்கு, சரஸ்வதி மருத்துவமனை பின்புறம் பகுதியில் சட்டவிரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த பிரசாந்த், வ/23, த/பெ.குப்புசாமி, ராம்நகர் 1வது தெரு, மடிப்பாக்கம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 188 டைடல், 10 நைட்ரசோன் என மொத்தம் 198 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 1 செல்போன் மற்றும் பணம் ரூ.1,01,250/- பறிமுதல் செய்யப்பட்டது.

S-9 பழவந்தாங்கல் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர்   கடந்த 08.03.2023 அன்று மூவரசன்பேட்டை, குளக்கரை அருகில் மெத்தபெடமைன் போதை பொருள் வைத்திருந்த  லிங்கராஜ், வ/34, த/பெ.பரமசிவம்,  எண்.5/2, தங்கவேல் தெரு, தாம்பரம், சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 செல்போன்கள் மற்றும் ரொக்கம் ரூ.700/- பறிமுதல் செய்யப்பட்டது.

D-4 ஜாம் பஜார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர்   நேற்று (09.03.2023) காலை, ஜாம் பஜார், பாரதி சாலை மற்றும் T.H. ரோடு சந்திப்பு அருகே கண்காணித்து, சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 1.ரஜிப்தேப்நாத், வ/39, த/பெ.அபினவ் தேப்நாத், உதய்பூர், திரிபுரா மாநிலம், 2.நந்து மக்ரஜி, வ/24, த/பெ.பதுல் மத்ரஜி, உதய்பூர் திரிபுரா, 3.உஜல் சாஹா, வ/24, த/பெ.அமர் சாஹா, உதய்பூர், திரிபுரா ஆகிய மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 19 கிலோ எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின்  பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 645 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,464 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 781 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Tags : Chennai ,Shankar Jiwal , Strict legal action against drug traffickers and sellers in Chennai: Shankar Jiwal warns..!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...