×

மாதவரத்தில் ரூ.284.51 கோடி மதிப்பில் மெட்ரோ ரயில் பணிமனை: நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆய்வு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயிலின் வழித்தடம் 5-ல் 48.89 ஏக்கர் பரப்பளவில் ரூ. 284 கோடியே 51 லட்சம் மதிப்பில் மாதவரத்தில் அமைக்கப்பட்டு வரும் பணிமனையினை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ.சித்திக் பார்வையிட்டார். மாதவரத்தில் அமைக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் பணிமனையில் மூன்று பெட்டிகள் கொண்ட ஒரு மெட்ரோ ரயில் என்ற அடிபடையில் 110 மெட்ரோ ரயில்கள் நிருத்தும் வகையில் பணிமனை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிமனையில் 24 ரயில் நிறுத்த பாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ ரயில்கள் நிறுத்த 10 இருப்பு பாதைகளும், பழுது மற்றும் சுத்தம் செய்ய 7 இருப்பு பாதைகளும், மெட்ரோ இரயில்களை ஆய்வு செய்ய 7 இருப்பு பாதைகள் என மொத்தம் 24 இருப்புபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிறுத்த பாதைகள் மொத்தம் 110 மெட்ரோ இரயில்கள் நிறுத்தும் வசதி கொண்டது. இதுதவிர, 1.4 கி.மீ நீளத்திற்கு சோதனை ஓட்டத்திற்கான இருப்பு பாதையும் அமைக்கப்படவுள்ளது. மெட்ரோ இரயில்களை பராமரிக்கவும், சுத்தம் செய்யவும், தொழில்நுட்ப பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த பணிமனை வடிவமைக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் வழித்தடம் 3 மற்றும் 5-60 இயக்கப்படவுள்ள மெட்ரோ இரயில்களுக்கான பணிமனையாக மாதவரம் பணிமனை செயல்படவுள்ளது. மாதவரம் மெட்ரோ இரயில் பணிமனை பணிகள் அனைத்தும் 2024-ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் மெட்ரோ இரயில் பணிமனை பணிகளை பார்வையிட்ட சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் இத்தகவலை தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் மேலாண்மை இயக்குநருடன், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் பி.எஸ்.ஸ்ரீனிவாஸ், சிவில் வெங்கட்ரெட்டி பிபொது ஆலோசகர் 1-ன் குழுத் தலைவர் டோனி புர்செல், பொது ஆலோசகர் 1-ன் தொகுப்பு தலைவர் துர்கா பிரசாத், கட்டுமான பிரிவு மேலாளர் பி.வெங்கட்ரெட்டி மற்றும் பலர் இருந்தனர்.

Tags : Metro Rail , Rs 284.51 Crore Metro Rail Workshop at Madhavaram: Review by Managing Director of Company
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்