ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஆன்லைன் ரம்மி நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டீஸ் மீது இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது என்று ஐகோர்ட் கூறியுள்ளது.  ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த இருவர் தற்கொலை தொடர்பாக நிறுவனத்திற்கு சிபிசிஐடி நோட்டிஸ் அனுப்பியுள்ளது. சிபிசிஐடி அனுப்பிய நோட்டிஸை எதிர்த்து கேம்ஸ் 24*7 என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, பெருங்குடியில் மனைவி, மகன்களை கொன்றுவிட்டு மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு உத்தரவு அளித்துள்ளனர். ஏற்கனவே காவல்துறை கேட்ட விவரங்களை வழங்கி விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள நிலையில் உள்நோக்குடன் விசாரணை மேற்கொண்டுள்ளது. கேம்ஸ் 24*7 நிறுவனம் தொடர்ந்த வழக்கை மார்ச் 14-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்தியா முழுவதும் ஆன்லைன் சுதாட்டத்தை ஆயிரக்கணக்கான மக்கள் விளையாடி வருகின்றனர்.  இதில் பணத்தை சம்பாதிக்கும் மக்களைவிட பணத்தை இழந்து தவிக்கும் மக்களே அதிகமாக உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையான மக்கள், பனத்தை இழக்கும் போது, மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இதனால் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. தமிழக சட்டமன்றத்திலும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக பதிவான 17 வழக்குகளை சிபிசிஐடி விசாரிக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்ததாக 17 வழக்குகள் பதிவாகின. அது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்த டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட மரணங்கள் குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக ஆன்லைன் சூதாட்ட தற்கொலை தொடர்பாக விளக்கம் கேட்டு அந்தந்த நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ட்ரீம் 11, ரம்மி, ரம்மி கல்சர், ஜங்கிலி ரம்மி , லுடோ, பப்ஜி உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேம்ஸ் 24*7 நிறுவனம் தொடர்ந்த வழக்கை மார்ச் 14-க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Related Stories: