பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும்: ஜே.பி.நட்டா பேச்சு

கிருஷ்னகிரி: தமிழ்நாட்டில் கூடிய விரைவில் தாமரை  மலரப்போகிறது என் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் குத்தாரப்பள்ளியில் புதியதாகக் கட்டுப்பட்டுள்ள பாஜக மாவட்ட அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மாவட்ட அலுவலகத்தைத் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை, திருச்சி, தேனி, தருமபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்களை அவர் காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். அதன் பிறகு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்; தமிழ்நாட்டில் ஒரே நாளில் 10 பாஜக அலுவலகங்கள் இதற்கு முன்பு திறக்கப்பட்டது கிடையாது.

இன்று அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். தமிழ்நாடு பாஜகவினர் சோதனை காலக் கட்டத்திலும் அர்ப்புணப்புடன் பணியாற்றி வருகிறார்கள். பாஜக தொண்டர்களின் கடின உழைப்பால் தமிழ்நாட்டில் விரைவில் தாமரை மலரும். ஏனென்றால், பாஜக மட்டும்தான் கொள்கை சார்ந்த, தொண்டர்கள் சார்ந்த கட்சி. பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை மக்களுக்கான நேரடி ஆட்சியே பாஜக. பாஜக கட்சி அலுவலகங்கள் 24 மணி நேரமும் திறந்தே இருக்கும். ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப கட்சிகளுக்கு எதிராக பாஜக போராடி வருகிறது. காங்கிரசின் மோசமான ஆட்சி காரணமாகவே மாநில கட்சிகள் தோன்றின. பாஜகவால் மட்டும் தமிழகத்தில் நல்லாட்சியை வழங்க முடியும்.

தமிழ்நாட்டில் 40 ஆண்டு காலம் எந்த கட்சிகளும் கொண்டுவராத ரயில்வே திட்டங்களை கடந்த 9 ஆண்டுகளில் பாஜக கொண்டு வந்துள்ளது. உலகம் முழுவதும் தமிழ் மக்களின் பெருமையை கொண்டு சேர்ப்பதற்காக பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார். தமிழ் மொழிக்கு மரியாதை கொடுத்திருப்பதால்தான் தமிழ்நாட்டுக்கு பல புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளார். தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் செலுத்தும் விதமாக திருவள்ளுவருக்கு மரியாதை கொடுக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.

Related Stories: