இந்தியா-ஆஸி. கடைசி டெஸ்ட்டின் முதல் நாளில் அகமதாபாத் மைதானத்தில் 1 லட்சம் ரசிகர்கள் திரண்டு புதிய சாதனை

அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையே 4 போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் கடைசி டெஸ்ட் நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் தொடங்கியது. இந்த போட்டியின் நேற்றைய முதல் நாள் ஆட்டத்தை இந்திய பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் பார்த்து ரசித்தனர். இந்நிலையில் நேற்றைய முதல்நாள் ஆட்டத்தை ஒரு லட்சம் ரசிகர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதன் மூலம் மைதானத்திற்கு அதிக ரசிகர்கள் வந்து கிரிக்கெட்டை பார்த்த சாதனையை அகமதாபாத் ஸ்டேடியம் படைத்துள்ளது.

இதற்கு முன் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் 2013ல் ஆஸி.-இங்கிலாந்து இடையேயான ஆஷஸ் தொடரின் பாக்சிங்டே டெஸ்டின் முதல் நாளில் 91,092 பேர் பார்க்க வந்திருந்தனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் திரண்டது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு குஜராத் டைட்டன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் மோதிய ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது, ​​1 லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியைப் பார்த்தனர். இது டி20 கிரிக்கெட் போட்டியில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பார்வையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: