×

கடன் தொல்லையால் லேத் பட்டறை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை: வேதனையில் மனைவி தூக்கிட்டு சாவு

சேலம்: கடன் தொல்லையால் விஷம் குடித்து இறந்துபோன கணவரின் உடலை பார்த்த மனைவி, வேதனையில் மருத்துவமனையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் (65). இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இவருடன் மகன் பாபுவும் தந்தையுடன் அங்கு வேலை செய்து வருகிறார். தங்கராஜ், தொழிலுக்காக ரெட்டியூரைச்சேர்ந்த ராஜா என்பவரிடம் ரூ. 2 லட்சம் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். கடந்த 2 மாதமாக வட்டி தொகையை ெகாடுக்கவில்லை. பணம் கொடுத்தவர் நெருக்கடி கொடுத்ததுடன் மிரட்டிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த தங்கராஜ், கடந்த 8ம்தேதி, சூரமங்கலம் புதுரோடு பக்கமுள்ள பூனைக்கரட்டில் மதுவில் விஷத்ைத கலந்து குடித்தார்.

பின்னர் தற்போது வசிக்கும் இரும்பாலை ஓம்சக்திநகரில் உள்ள வீட்டிற்கு வந்து விஷம் குடித்ததாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த தங்கராஜ், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை மருத்துவமனையில் உள்ள அறையில் பிரிசர் பாக்சில் வைத்து, விடிந்ததும் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்ல வைத்திருந்தனர். அவரின் உடல் அருகே மனைவி விஜயா(58) கண்ணீருடன் அமர்ந்திருந்தார். இந்நிலையில் இன்று காலை அங்கிருந்த அறைக்கு சென்ற விஜயா, யாரும் எதிர்பாராத நேரத்தில் சேலையில் தூக்கில் தொங்கினார்.

இதனை பார்த்த உறவினர்கள் ஓடிவந்து அவரை கீழே இறக்கினர். ஆனால் அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு பாபு, கோபி என்ற 2மகன்களும், சபிதா என்ற மகளும் உள்ளனர். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சூரமங்கலம் போலீசார் சென்று தங்கராஜ் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அஸ்தம்பட்டி போலீசார் விஜயாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக வட்டிக்கு பணம் கொடுத்த ரெட்டியூரைசேர்ந்த ராஜாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Lathe , Lathe workshop owner commits suicide due to debt problem: Wife hangs herself in agony
× RELATED பூந்தமல்லி அருகே மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உறுப்புகள் தானம்