மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி..!!

மதுரை: மதுரை மாவட்டம் சக்குடி கிராமத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நாளை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சக்குடி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அரசின் விதிமுறைகளை போட்டி ஏற்பாட்டாளர்கள் முறையாக பின்பற்றவில்லை என மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்கள், காளைகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: