திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருவர் மீது கொலை வெறி தாக்குதல்: மோதலால் மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகள் ஓட்டம்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலால் மருத்துவமனையில் உள்ள பொருட்கள் வேட்டையாடப்பட்டன. மோதல் காரணமாக மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் அலறியடித்து ஓட்டமடித்தனர். ஜோலார்பேட்டை சுரக்கான்பட்டம் பகுதியை சேர்ந்த தாமோதரன் ஜானகிராமன் ஆகியோருக்கும் குமரேசன் திருமூர்த்தி ஆகியோருக்கும் இடையே 10 சென்ட் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஜானகி ராமன் மற்றும் தாமோதரனை குமரேசன், திருமூர்த்தி ஆகியோர் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் படுகாயங்களுடன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஜானகிராமன் மற்றும் தாமோதரன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அப்போது மருத்துவமனைக்கு வந்த குமரேசன் மற்றும் திருமூர்த்தி ஆகியோர் சிகிச்சை பெற்றுவந்த இருவர் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். கண்மூடித்தனமான தாக்குதலில் மருத்துவமனை கண்ணாடிகள் பொருட்கள் நொறுங்கின இதை கண்ட நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

Related Stories: