×

இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார் கேமரூன் கிரீன்!

அகமதாபாத்: இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸி.யின் கேமரூன் கிரீன் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். தொடக்க ஆட்டக்காரர் கவாஜா 14வது சதமடித்து விளையாடி வரும் நிலையில் கிரீன் தனது முதல் சதத்தை அடித்தார். அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 350 ரன்களை குவித்து ஆஸ்திரேலியா வலுவாக உள்ளது.

இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மார்னஸ் லபுஷேன் 3 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 38 ரன்களிலும் அவுட் ஆகினர்.

அடுத்து வந்த ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், கவாஜா உடன் கைகோர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் கவாஜா தனது சதத்தை 14வது பதிவு செய்தார். அவருடன் கைகோர்த்து விளையாடிய கேமரூன் கிரீன் சர்வதேச அரங்கில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.

ஆஸ்திரேலிய அணி 378 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய அலெக்ஸ் கேரி(0), மிட்செல் ஸ்டார்க்(6) ஆகியோர் அஸ்வின் சூழலில் சிக்கினர். 7 விக்கெட் இழப்பிற்கு 407 ரன்களுடன் ஆஸ்திரேலிய அணி வலுவான நிலையில் உள்ளது. கவாஜா 179 ரன்களுடன் காலத்தில் உள்ளார்.


Tags : Cameron Green ,India , Cameron Green scored his first international century in the 4th Test match against India!
× RELATED களை கட்டிய மாம்பழ சீசன் பழக்கடைகளில்...