சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் அல் நாசர் கிளப் அதிர்ச்சி தோல்வி..!!

சவூதி: சவூதி புரோ லீக் கால்பந்து போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடும் அல் நாசர் கிளப் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நாசர் கிளப்பில் விளையாடுவதால் சவூதி புரோ லீக் கவனம் பெற்றுள்ளது. 16 அணிகள் விளையாடும் இத்தொடரில் நேற்று அல்-இத்திஹாத் , அல் நாசர் அணிகள் பலப்பரீச்சை நடத்தினர்.

இரு அணி வீரர்களும் 79 நிமிடங்கள் வரை போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பதாவது நிமிடத்தில் அல்-இத்திஹாத் வீரர் ரோமரினோ கோல் அடித்து அசத்தினார். கூடுதல் நேரத்தின் போது ரொனால்டோ கோல் அடிக்க முயல அல்-இத்திஹாத் கோல் கீப்பர் மார்செலோ லபாகமாக தடுத்து அணியை காப்பாற்றினார். அல் நாசர்  அணி 0-1 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்ததை அடுத்து புள்ளி பட்டியலில் அல்-இத்திஹாத் அணி முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Related Stories: