சென்னை: என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்துள்ளனர். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சருடன் கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.ம.க. உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் சந்தித்தனர். என்.எல்.சி. ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
* கே.பாலகிருஷ்ணன் பேட்டி
என்எல்சி பிரச்னை தொடர்பாக மனு அளித்துள்ளோம். என்எல்சி விரிவாக்கத்திற்கு விலை நிலங்களை கையகப்படுத்தும் பணியாயி கைவிட வேண்டும். பேச்சு வார்த்தையின் போது கோரிக்கைக்களை முன்வைத்துள்ளோம். என்எல்சி விரிவாக்கத்திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இன்னும் முழுமையாக நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய தீர்வு காண்பதற்காக முதல்வர ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
*திருமாவளவன் பேட்டி
பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து மக்களின் பிரச்சினையை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்துளோம். நிலத்தை கொடுத்து வாழ்வாதாரம் இழந்த மக்களுக்கு வேலை வாங்கி தர வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
