சென்னை: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை நபர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக போலீஸ் பதில் தர ஆணையிட்டுள்ளது. 2 வாரங்களில் காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி நண்பர் முனிரத்தினம் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த இரு வாரங்களுக்கு முன்பு கோவையில், சஞ்சய் ராஜா என்பவர் ஒரு கொலை வழக்கில் சரணடைந்திருந்தார்.
ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணைக்காக சஞ்சய் ராஜாவை அழைத்து செல்லும் போது தப்பிக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அப்படி சஞ்சய் ராஜ் தப்பி செல்லும்போது, கரட்டுமேடு பகுதியில் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதாக தெரிகிறது. இதில் தற்காப்புக்காக காவல்துறையினர் சஞ்சய் ராஜை சுட்டு பிடித்தனர். இந்த நிலையில், கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கோவை நபர் மீது துப்பாக்கிசூடு நடத்தியது தொடர்பாக காவல்துறை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.