சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதிமொழி ஏற்றார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18-ஆனது.
