×

இந்தியாவில் விரைவில் சில்லறை கடைகளை திறக்கும் ஆப்பிள் நிறுவனம்

மும்பை: இந்தியாவை முக்கிய விற்பனை மண்டலமாக்க மாற்ற ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன், மேக் கணினி, லேப்டாப், கடிகாரம் உள்ளிட்டவற்றிற்கு இந்தியாவில் நாளுக்கு நாள் தேவை அதிகரித்து கொண்டே போகிறது. இதனால் உலகளவில் விற்பனையை உயர்த்துவதற்கு இந்தியாவை தனது முக்கிய விற்பனை மண்டலமாக மாற்றி கொள்ள ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் மொத்த விற்பனை 5 சதவீதம் குறைந்தாலும் இந்தியாவின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டது அதே நேரம் இந்தியாவிற்கென்று ஆன்லைன் விற்பனை மையத்தை மட்டும் உருவாகியுள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்திய நகரங்களில் நேரடி விற்பனை நிலையங்கள் இல்லை இதனால் விரைவில் முதல் சில்லறை விற்பனை கடை திறக்கப்படவுள்ளது.

அதற்காக ஊழியர்களை தேர்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக பைனான்சியல் டைம்ஸ் கூறியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பா அடுத்தபடியாக சீனாவில் தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளின் விற்பனை 75 மில்லியன் டாலர் ஆக உள்ளது. அது போன்ற ஒரு விற்பனைக்காக சீனாவில் எடுக்கப்பட்ட அதே போன்ற நடவடிக்கைகளை இந்தியாவிலும் மேற்கொண்டு வருவதாக ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம்குக் கூறியுள்ளார்.


Tags : Apple ,India , India, retail store soon, Apple
× RELATED ஐபோன் கேமரா தயாரிக்க தமிழக நிறுவனத்துடன் பேச்சு!!