×

இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வரும் : இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

புதுக்கோட்டை : இனி வரும் காலங்களில் விண்வெளி ஆய்விற்காக நிலவுக்கோ, செவ்வாய்க்கோ செல்ல வேண்டுமானால் பல நாடுகள் இணைந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று மயில்சாமி அண்ணாதுரை விருப்பம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் வடக்காட்டில் தாய், தமிழ் மழலையர் பள்ளியில் புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்திய விண்வெளி ஆய்வு நிலைய முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை, குழந்தைகள் தாய்மொழியில் கல்வி கற்பது தான் அறிவியல்ப்பூர்வமாக சிறந்தது என்று குறிப்பிட்டார்.

அறிவியல் கருதுகோள்களை புரிந்துக் கொள்ள தாய்மொழி கல்வி அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.  விண்வெளி ஆய்வில் முன்னணியில் இருக்கும் நாடுகள் இணைந்து அடுத்தகட்ட ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் ஏனென்றால் மிகப்பெரிய அளவில் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்தியர்கள் நிலவில் கால்பதிக்கும் காலம் கூடிய விரைவில் வர வேண்டும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Moon ,ISRO ,Mayilsami Annadurai , Indians, ISRO, Mailsamy Annadurai
× RELATED ரிஷபம்