டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் பி.ஆர்.எஸ். கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மகள் கவிதா தலைமையிலான உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை நடப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டு வருகிறது.
