சென்னை கொடுங்கையூரில் ரவுடி கருப்பா கொலை தொடர்பாக 6 பேர் கைது

சென்னை: சென்னை கொடுங்கையூரில் ரவுடி கருப்பா கொலை தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர். கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ், மணிகண்டன், சீமென் ராஜ், பாலாஜி, ரபீக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொடுங்கையூர், குமாரசாமி ராஜபுரத்தைச் சேர்ந்த ரவுடி, 30 வயதான கருப்பா. இவர் மீது 15 வழக்குகள் உள்ளன. இரண்டு மாதங்களுக்கு முன்பு கொடுங்கையூருக்கு குடிபெயர்ந்த ரவுடி கருப்பா ஆட்டோ ஓட்டி வந்துள்ளார்.

கொடுங்கையூர் பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டில் அமர்ந்திருந்த ரவுடி கருப்பாவை இரண்டு  ஆட்டோக்களில் வந்த கும்பல் அவரை துரத்தி கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் ரவுடி கருப்பா ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். இது பற்றி தகவலறிந்த கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ரகுபதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது மருத்துவமனை வழியிலேயே ரவுடி கருப்பா உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் ரவுடி கருப்பா கொலை தொடர்பாக கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ், மணிகண்டன், சீமென் ராஜ், பாலாஜி, ரபீக், மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: