×

இன்ஃப்ளூயன்சா 'மர்ம'காய்ச்சல் : தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் தொடங்கியது!

சென்னை :இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் தொடங்கியது. இந்தியாவில் இன்ஃப்ளூயன்சா ஏ என்ற H3N2 வகைக் காய்ச்சல் பரவி வருகிறது. இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, ஒரு வாரத்திற்கும் கூடுதலாக நீடிக்கும் இருமல் போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு கூறியுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ் தொற்றின் காரணமாக இருமளுடன் கூடிய காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .

இதனை தடுக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இன்று சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெறவுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்ரமணியன் தொடக்கி வைத்தார். தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலம் மக்கள் எளிதாக வீட்டிற்கு அருகிலேயே அதிக எண்ணிக்கையில் மருத்துவ வசதியை பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது.சென்னையில் மட்டும் 200 இடங்களில் முகாம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முகாமிற்கு தேவையான மருந்துகள், மாத்திரைகள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்டவை மாவட்ட சுகாதார நிர்வாகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. மருத்துவ முகாமில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்பனர் மற்றும் ஒரு உதவியாளர் இருப்பார்கள்.


Tags : Tamil Nadu , Influenza, Contagion, Tamilnadu, Specialty, Fever, Camp
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...