×

ஊட்டியில் இருந்து ஆளுநரை வெளியேறக் கோரி கருப்பு கொடியுடன் ராஜ்பவன் முற்றுகையிட முயன்ற கட்சியினர் கைது!!

நீலகிரி: தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால், பல்வேறு தற்கொலைகள் நிகழ்ந்ததோடு பலர் தங்களது பணத்தையும் இழந்துள்ளனர். இதுவரை 44 பேர் தற்கொலை செய்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி அனைத்து கட்சிகளின் ஆதரவோடு ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்த மசோதா  ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த ஆண்டு அக்டோபர் 28-ந்தேதி அனுப்பி வைக்கப்பட்டது. பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட அந்த மசோதாவை  ஆளுநர் ஆர்.என்.ரவி  தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

இந்த நிலையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திரும்ப அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் சிபிஐ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஊட்டி ராஜ்பவன் மாளிகையை முற்றுகையிட்டு கருப்பு கொடி காட்ட உள்ளதாக கூறியதைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா மற்றும் ஆளுநர் கான்வாய் செல்ல உள்ள சாலை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தங்கியுள்ள தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி இன்று காலை 7.30  மணி அளவில் பலத்த பாதுகாப்புடன் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்திரி பகுதிக்கு புறப்பட்டு சென்றார்.ஆளுநர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில்  ஆன்லைன் ரம்மி மசோதாவை திரும்ப அனுப்பியதை கண்டித்து ஊட்டியில் இருந்து ஆளுநரை வெளியேறக் கோரி சிபிஎம், சிபிஐ கட்சியினர் கருப்பு கொடியுடன் ராஜ்பவன் முற்றுகையிட முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Tags : Rajbhavan ,Governor ,OOTI , Ooty, Governor, Black Flag, Raj Bhavan
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...