திருவொற்றியூர்: மாதவரம் காவல் நிலையத்தில், மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு, சட்டம்- ஒழுங்கு ஆய்வாளர் சிவகுமார் தலைமை வகித்தார். புழல் சரக உதவி ஆணையர் ஆதிமூலம் விழாவை துவக்கி வைத்து, அனைத்து துறையிலும் பெண்கள் செய்து வரும் சாதனைகளையும், அர்ப்பணிப்பையும் விளக்கி பெண்களை பாராட்டி, புத்தாடை, இனிப்பு வழங்கினார்.
தொடர்ந்து பெண் காவலர்கள், தாங்கள் குடும்ப தலைவியாகவும், பெண் காவலர்களாகவும் பணியாற்றுவதில் ஏற்படுகின்ற நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். காவல்துறைக்கு நற்பெயர் ஏற்படவும், பொதுமக்கள் பாராட்டும் வகையிலும் சிறப்பாக பணியாற்றுவோம் என்று அனைவரும் உறுதி ஏற்றனர். விழாவில், குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் கலந்து கொண்டனர்.