×

19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, முகவரி மாற்ற சிறப்பு முகாம்: நாளை நடக்கிறது

சென்னை: உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆைணயர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மார்ச் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (சனி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு மாற்றம் செய்தல் மற்றும் புதிய குடும்ப அட்டை நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலை கடைகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் பெற நேரில் வர இயலாத மூத்தகுடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகார சான்று வழங்கப்படும். பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : 19 Zonal Assistant Commissioner Offices , Special camp for adding name in ration card, changing address at 19 Zonal Assistant Commissioner Offices: To be held tomorrow
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்