உக்ரைனில் தலைநகர் கீவ், முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல்: 5 பேர் பலி

கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 5 பேர் பலியானதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடர்ந்து கடுமையாக்கி வருகிறது.  நேற்று காலை தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்கள் மீது வான்வழி தாக்குதல்கள் நடத்தப்பட்டது.  ஏவுகணைகள் மூலமாகவும், வெடிகுண்டுகள் மூலமாகவும் முக்கிய உள்கட்டமைப்புகள் தாக்கப்பட்டன.  எத்தனை ஏவுகணைகள் இலக்கை தாக்கின, எத்தனை இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.

ஹோலோசிவ்ஸ்கி மாவட்டத்தில் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்ததாகவும் அவசரகால சேவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கீவ் மேயர் தெரிவித்துள்ளார். ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட சபோரிஸ்சியா அணுமின் நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதல் காரணமாக மீண்டும் செயலிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல்  தனியாருக்கு சொந்தமான 3 மின் உற்பத்தி நிலையங்கள் தாக்குதலுக்கு  உள்ளாகி உள்ளது. அங்குள்ள உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளது.  

கிழக்கு உக்ரைனில் கார்கிவ் மற்றும் வடகிழக்கு பிராந்தியங்களை சுமார் 15 ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகின்றது. குடியிருப்பு கட்டிடங்கள், அரசு கட்டிடங்கள் தாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் லிவிவ் பிராந்தியத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டினிப்ரோபெட்ரோவ்ஸ் பிராந்தியத்தில் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதலின்போது ஒருவர் உயிரிழந்தார். இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

Related Stories: