கஞ்சா வியாபாரியுடன் தொடர்பு திருப்பூரை சேர்ந்த 2 போலீசார் கைது

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்தவர் சம்சுதீன். கடந்த ஆண்டு இவர் கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து இவரிடம் நடந்த விசாரணையில் கஞ்சா வாங்கி விற்ற இவரிடம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் காவல் நிலையத்தில் காவலராக பணி புரிந்து வந்த சரவணன் (37), பெருந்தொகையை லஞ்சமாக பெற்றுள்ளார் என்பது தெரியவந்தது. சம்சுதீன் கைதான தகவலறிந்ததும் தலைமறைவான இவரை, போலீசார் தேடி வந்தனர். 2 நாட்களுக்கு முன்னர் சரவணனை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் பல்லடம் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் மற்றொரு காவலர்  அருண்பாண்டியனுக்கும் (32)  கஞ்சா தொழிலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று இரவு அவரையும் தேவகோட்டை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: