×

இந்திய பேராசிரியைக்கு எதிராக அமெரிக்க கல்லூரியில் இனப்பாகுபாடு: நீதிமன்றத்தில் வழக்கு

நியூயார்க்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் பேராசிரியைக்கு எதிராக இனபாகுபாடு காட்டப்பட்டதாக கல்லூரி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மசாசூசெட்சில் உள்ள வெல்லெஸ்லி வணிக பள்ளியில் கடந்த 2012ம் ஆண்டு இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான லட்சுமி பாலசந்திரா இணை பேராசிரியராக சேர்ந்ததார். இந்நிலையில் கல்லூரியில் தனக்கு எதிராக பாலின மற்றும் இனபாகுபாடு காட்டப்பட்டதாக அவர் பாஸ்டனில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 27ம் தேதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதில், பாப்சன் கல்லூரியில் தனக்கு எதிராக பாலின மற்றும் இனபாகுபாடு காரணமாக பல்வேறு வாய்ப்புக்களை இழந்ததாகவும், பொருளாதார இழப்பை சந்தித்தாகவும், மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவரது ஆராய்ச்சி பதிவுகள், ஆர்வம் மற்றும் கல்லூரிக்கு சேவை செய்தபோதிலும் பாரபட்சம் காட்டப்பட்டு பல தலைமை பதவிகள் மறுக்கப்பட்டது. ஆராய்ச்சியை செய்வதற்கும், ஆய்வு அறிக்கைகள் எழுதுவதற்கும் அதிக நேரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.


Tags : Racial discrimination in American college against Indian professor: Case in court
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...