இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நியமனம்: செனட் கமிட்டி ஒப்புதல்

வாஷிங்டன்: லாஸ் ஏஞ்செல்ஸ் நகர முன்னாள் மேயர் எரிக் கார்செட்டியை  இந்திய தூதராக நியமிக்க, கடந்த 2021ம் ஆண்டு  அதிபர் ஜோ பைடன் பரிந்துரை செய்தார்.ஆனால் குடியரசுக் கட்சி எம்பி.க்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அந்தப் பரிந்துரையை அரசு அரசு திரும்பப் பெற்றது. அதன் பின்னர் தூதர் பதவிக்கு எரிக் பெயரை அதிபர் ஜோ பைடன் மீண்டும் பரிந்துரை செய்தார்.

எரிக்கை நியமிப்பது தொடர்பான தீர்மானம்  கடந்த முறை நடந்த நாடாளுமன்ற  கூட்டத்தில் வாக்கெடுப்பு விடப்பட்டது. ஆனால், இதில், ஆளும் ஜனநாயக கட்சிக்கு போதுமான ஆதரவு கிடைக்காததால் தோல்வியடைந்தது. இந்நிலையில்,செனட்  வெளியுறவு கமிட்டி கூட்டத்தில்  கார்செட்டியின் நியமனத்துக்கு  எம்பி.க்கள் ஒப்புதல் அளித்தனர்.  எனவே, இந்த தீர்மானம் மீண்டும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு விடப்படும் என தெரிகிறது.

Related Stories: