×

நேபாள ஜனாதிபதியாக ராம்சந்திரா தேர்வு

காத்மாண்டு: நேபாளத்தில் ஜனாதிபதியாக இருக்கும் பித்யா தேவி பண்டாரி பதவிக்காலம் நாளை மறுநாள்  முடிவடைகிறது. எனவே அங்கு புதிய ஜனாதிபதியை தேர்வு செய்யும் தேர்தல் நேற்று  நடந்தது. இந்த தேர்தலில் நேபாள காங்கிரஸ் சார்பில் ராம்சந்திரா பவ்டெல்,  சிபிஎன், யுஎம்எல் கூட்டணி சார்பில் சுபாஷ் சந்திரா நிறுத்தப்பட்டுள்ளனர்.  நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் ஓட்டு போட்டனர்.

மொத்தம் உள்ள 550 மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களில் 518 பேர் வாக்களித்தனர். அதே போல் 332 எம்பிக்களில் 313 பேர் ஓட்டு போட்டனர்.  மாலை 4 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் ராம்சந்திரா பவ்டெல் 214 எம்பிகள், 352 மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவை பெற்று புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். 2008ல் நேபாள நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு 3வது ஜனாதிபதியாக ராம்சந்திரா பவ்டெல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Tags : Ramchandra ,President of Nepal , Ramchandra was elected as the President of Nepal
× RELATED நேபாள அதிபர் மருத்துவமனையில் அனுமதி