சென்னை: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் விளையாட்டு அரங்கில் பழைய பகுதிகள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டுள்ளன. புதுப்பிக்கப்பட்ட அரங்குகளை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மார்ச் 13ம் தேதி தொடங்கி வைக்கிறார். அந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க(டின்சிஏ) நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்கின்றனர். கூடவே மார்ச் 22ம் தேதி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3வது ஒருநாள் ஆட்டம் சென்னை சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ளது.
அதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனையும் மார்ச் 13ம் தேதி தொடங்குகிறது. அரங்கில் உள்ள மையங்கள் மூலமாக நேரடி டிக்கெட் விற்பனை மார்ச் 18ம் தேதி முற்பகல் 11மணிக்கு தொடங்கும் என்று டிஎன்சிஏ அறிவித்துள்ளது. மேலும் டிக்கெட் விலைகளும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அரங்கில் உள்ள விற்பனை மையங்கள் மூலம் நேரடியாக ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட் ஒன்றின் விலை ரூ.1200. இது தவிர ஆன்லைன் மூலம் 1500, 3000, 5000, 6000, 8000, 10000 ரூபாய்களுக்கு டிக்கெட்கள் விற்கப்படும்.
