×

ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை நிறைவேற்ற தமிழக சட்டசபைக்கு அதிகாரம் இல்லையா?: கவர்னர் ரவிக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து, தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுனர் ரவி திருப்பி அனுப்பியிருக்கிறார். ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்து சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டப்பேரவைக்கு இல்லை என்று ஆளுனர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆளுனர் அவ்வாறு கூறியது உண்மை என்றால் அது கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்தை ஆளுனர் திருப்பிய விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்.



Tags : Tamil Nadu Assembly ,Anbumani ,Governor ,Ravi , Does the Tamil Nadu Assembly not have the authority to pass the Anti-Online Gambling Act?: Anbumani condemns Governor Ravi
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்