ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார் ஹன்சிகாவின் 51வது படம் ‘மேன்’

சென்னை: திரைக்கு வந்த ‘96’, ‘ரோமியோ ஜூலியட்’, ‘கலாபக் காதலன்’ ஆகிய படங்களை தயாரித்த மெட்ராஸ் ஸ்டுடியோஸ், தற்போது அன்ஷு பிரபாகர் பிலிம்சுடன் இணைந்து, ஹன்சிகா நடிக்கும் 51வது படமான ‘மேன்’ படத்தை தயாரிக்கிறது. ‘கலாபக் காதலன்’ இகோர் இயக்குகிறார். படம் குறித்து அவர் கூறியதாவது:  ஆண்மை என்பது ஒரு அகங்காரக்கூறாக மாறிவிட்டது. இது ஒரு போலி அடையாளத்தை உருவாக்கியுள்ளது. மேலும், இது பெண்களை அடக்கி, ஆதிக்கம் செலுத்துவது போன்ற ஒரு பிம்பத்தையும் கட்டமைத்துள்ளது. இந்த இயற்கைக்கு எதிரான ஒரு பெண்ணின் கிளர்ச்சிப்போரை உள்ளடக்கியதே ‘மேன்’ என்ற தலைப்புக்கு காரணம்.

ஹன்சிகா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். முதல்முறையாக ஆரி அர்ஜுனன் வில்லனாக நடிக்கிறார். அவரது அர்ப்பணிப்பு மற்றும் நடிப்பு அசாதாரணமானது. இத்தகைய எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் தேவை. இப்படம் சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் சைக்காலஜிக்கல் திரில்லராகும். ‘96’ படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். சரண்யா பாக்யராஜ் திரைக்கதை எழுதியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளை நைஃப் நரேன், பிரபு அமைத்துள்ளனர். பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார்.  தற்போது இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.

Related Stories: