ஓபிஎஸ் அணி வேட்பாளர் எடப்பாடி அணியில் சேர்ந்தார்

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஓபிஎஸ் அணி சார்பில் நிறுத்தப்பட்ட செந்தில்முருகன் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்களுக்கும், கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட காரணத்தால் கழக அமைப்பு செயலாளர் பி.செந்தில்முருகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது செந்தில்முருகன் ஓபிஎஸ் அணி சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

பின்னர் அவரை வாபஸ் பெறுமாறு ஓ.பன்னீர்செல்வம் கேட்டுக் கொண்டார். இதையடுத்து அதிமுக கட்சியின் அமைப்பு செயலாளராக செந்தில்முருகன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கட்சியில் இருந்து அவரை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் இன்று அறிவித்துள்ளார். இந்தநிலையில், செந்தில்முருகன் எடப்பாடி முன்னிலையில் நேற்று அவரது அணியில் சேர்ந்தார். அதைத் தொடர்ந்துதான் அவரை ஓ.பன்னீர்செல்வம் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: