முகூர்த்த நாள் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு மதுரை, வேலூர், சேலம், ஒசூர், திண்டுக்கல் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து பூக்கள் வருகின்றன. கடந்த 15 நாட்களுக்கு முன்பு முகூர்த்த நாள் இல்லை என்பதால் மார்க்கெட்டில் ஒரு கிலோ ஐஸ் மல்லி 300க்கும் மல்லி 400க்கும் காட்டுமல்லி 300க்கும் முல்லை 300க்கும் ஜாதிமல்லி 300க்கும் கனகாபரம் 300க்கும் பன்னீர் ரோஸ் 50க்கும் சாக்லேட் ரோஸ் 60க்கும் சாமந்தி 70க்கும் சம்பங்கி 30க்கும் அரளி பூ 100க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று காலை முகூர்த்த நாள் என்பதால் ஒரு கிலோ ஐஸ் மல்லி 600க்கும் மல்லி 800க்கும் காட்டுமல்லி 500க்கும் முல்லை,  ஜாதிமல்லி 500க்கும் கனகாம்பரம் 600க்கும் அரளி பூ 200க்கும்  சாக்லேட்ரோஸ் 100க்கும் பன்னீர் ரோஸ் 120க்கும் சாமந்தி  20க்கும் சமங்கி 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் நிர்வாக குழு தலைவர் முத்துராஜ் கூறும்போது, ‘’கோயம்பேடு பூ மார்க்கெட்டில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு முகூர்த்த நாள் இல்லாததால் அனைத்து பூக்களின் விலை குறைந்தது.

வியாபாரம் இல்லாமல் வியாபாரிகள் கடும் அவதிப்பட்டனர். இன்றும் நாளையும் முகூர்த்த நாள் என்பதால் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வரும் 22ம் தேதி வரை நீடிக்கும்’’ என்றார்.

Related Stories: