திருவள்ளூர்: திருவள்ளூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தொழுவூரில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் சே.பிரேம் ஆனந்த் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், ஒன்றிய நிர்வாகிகள் க.ஜெயராமன், ஞா.ரமேஷ், மு.ராஜா, ப.மகேஸ்வரி பாலவினாயகம், எ.குட்டி என்கிற பக்தவச்சலு, இ.என்.சேகர், ப.இம்மானுவேல் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் ஐ.ஜெகநாதன், என்.ரவி, கே.புவியரசு, த.பாஸ்கர், அ.ஜெயபால், என்.முனுசாமி, சி.வீரராகவன், எ.பாஸ்கர், எம்.கஜேந்திரன் வரவேற்று பேசினர்.
விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் இஸ்திரி பெட்டிகள் மற்றும் தையல் இயந்தியரங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா, தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில ஆதி திராவிடர் நலக்குழு செயலாளரும் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏவுமான ஆ.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினர். இந்த கூட்டத்தில், மாநில, மாவட்ட நிர்வாகிகள் நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ், சி.ஜெரால்டு, பிரபு கஜேந்திரன், ம.ராஜி, வி.ஜே.சீனிவாசன், எஸ்.ஜெயபாலன், காயத்ரி தரன், தொழுவூர் பா.நரேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், ஜி.ராஜேந்திரன், ஜி.விமல்வர்ஷன், காஞ்சனா சுதாகர், மாநகர, ஒன்றிய நகர பகுதி, பேரூர் செயலாளர்கள் ஆர்.ஜெயசீலன், ஜி.ஆர்.திருமலை, டி.ராமகிருஷ்ணன், சன்பிரகாஷ், டி.தேசிங்கு, த.தங்கம் முரளி,
ஜி.நாராயணபிரசாத், மாவட்ட கவுன்சிலர் தென்னவன், மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் எஸ்.மூர்த்தி, சங்கீதா சீனிவாசன், ஆர்.எஸ்.ராஜராஜன், வி.ஜே.உமா மகேஸ்வரன், வ.ஹரி, ஆர்.பிரவீன்குமார், சு.மோத்திஸ் ஜித்து, க.பாபு, ஆர்.சக்தி பிரியதர்ஷினி, உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கீதாராஜ், வேதவள்ளி சதீஷ்குமார், ராஜேஸ்வரி சேகர், ஜெருஜோன்ஸ் பிரியதர்ஷினி தர், டி.சீனிவாசன், இ.சீனிவாசன், வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் ஜி.அருள், எஸ்.செந்தில்குமார், கே.எட்வின், பாலமுருகன், வி.மாறன், என்.ஹேமமாலினி, என்.நீலகண்டன், ஜி.கோபிநாத், கே.முருகானந்தம், டி.பாஸ்கர், ஒன்றிய அணிகளின் நிர்வாகிகள் ஆர்.ராஜி, வினோத்குமார், கே.மணிகண்டன், சே.கஜலட்சுமி, வி.உதயகுமார், ஆர்.ராஜேஷ், ஒன்றிய முன்னாள் நிர்வாகிகள் மோ.விஜயரங்கன், பி.ராமானுஜம், கோமளா சிகாமணி, கு.கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி ஆர்.திலிப்ராஜ் நன்றி கூறினார்.
