இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் கூடும்: அமெரிக்க உளவுத்துறை தகவல்

அமெரிக்கா: இந்திய பாகிஸ்தான் எல்லை விவகாரத்தில் பதற்றம் நிலவக்கூடும் என அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. எந்த சூழலையும் சமாளிக்கக் கூடிய வகையில் இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல் தெரிவித்தது. சீனா, பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் செயலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளிலே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

இத்தகைய சுழலில் தான் முன்பு இருந்ததை விட தற்போது நிலை மாறியுள்ளது என்றும் எல்லையிலே ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அதற்காக இந்தியா அமைதி காக்காது எனவும் பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. அதாவது பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறல் நடந்தாலோ அல்லது சீன எல்லையில் அத்துமீறல் நடந்தாலோ அதை அமைதியான முறையிலே பேச்சு வார்த்தை மூலம் சேர்க்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தது இந்தியா பெரிய அளவில் பதிலடி கொடுக்காமல் தேவையான அளவில் மட்டுமே பதிலடி கொடுத்து கொண்டிருந்தது.

ஆனால் தற்போதைய சூழல் படி முன்பு போல அல்லாமல் எல்லை தாண்டி  தாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுக்க இந்தியா தயங்காது என அமெரிக்க உளவுத்துறை தெரிவித்திருக்கிறது. புல்வாமிலே குண்டுவெடிப்பு நடந்தபோது காஷ்மீரிலே டி.ஆர்.எப் வீரர்கள் உயிரிழந்தனர். அதன் பிறகு இந்தியா எல்லை தாண்டி பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கியிருந்தது. அதே போலவே பல முறை எல்லை தாண்டி இந்திய வீரர்களை அனுப்பி முகாம்களை தாக்கச்சொல்லி இருந்தது.

இதைப்போலவே கிழக்கு எல்லையில் சீன வீரர்கள் கால்வான் பகுதியிலே இந்திய பகுதியில் ஊடுருவ முயன்ற போது அங்கேயும் கடும் கைகலப்பு ஏற்பட்டு இரண்டு பக்கங்களிலும் உயிரிழப்பு ஏற்பட்டது அதை தொடர்ந்து இந்தியா கிழக்கு எல்லையிலே தனது நிலைகளை வலுப்படுத்தி இருக்கிறது. கூடுதல் வீரர்களை அந்த பகுதிகளுக்கு அனுப்பி இருக்கிறது. இந்தியா வலுவான பதிலடி கொடுப்பதற்கான வாய்ப்பு தற்போது அதிகமாக இருக்கிறது என்றும் பிரதமர் மோடி தலைமையிலே அத்தகைய முடிவுகளை இந்தியா எடுப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் அமெரிக்கா உளவுத்துறை தெரிவித்திருக்கின்றது.

Related Stories: