×

தென்தமிழக மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா, அதனை ஒட்டிய மாவட்டங்களில் மார்ச் 11 முதல் 13 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென்தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 32-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்சமாக 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவகூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : South Tamil Nadu ,Meteorological Inspection Centre , South East, District, Moderate, Rainfall, Chance, Weather, Center, Information
× RELATED உறியடி, பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட...