சென்னை: H3N2 காய்ச்சல் வந்தால் 3 நாட்கள் வீட்டிலேயே இருந்தால் போதுமானது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். காய்ச்சல் பாதித்தவர்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும், மக்கள் பீதியடைய வேண்டாம் என செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அமைச்சர் கூறினார்.
