×

பிரான்ஸில் அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் போராட்டம்: மேக்ரான் அரசின் ஓய்வூதிய சீர்த்திருத்த திட்டத்துக்கு எதிர்ப்பு

பாரிஸ்: பிரான்ஸில் அரசின் ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் பெருந்திரள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிரான்ஸில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் வயதை 62-ல் இருந்து 64-ஆக உயர்த்த கடந்த சில ஆண்டுகளாகவே அதிபர் இமானுவேல் மேக்ரான் முயற்சி செய்து வருகிறார். ஆனால், இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

ஓய்வூதிய சீர்திருத்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் பாரிஸில் திரண்ட ஏராளமான அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பிரான்ஸ் அரசு வெளியிட்ட இந்த ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போக்குவரத்துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்நாட்டின் பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



Tags : France ,Macron government , In France, government, condemn, employee, protest, Macron, pension, plan, protest
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...