×

பெர்லின் நகரில் தமிழ்நாடு சுற்றுலா அரங்கம்: அமைச்சர் ராமச்சந்திரன் திறந்துவைத்தார்

சென்னை: பெர்லின் நகரில் அமைக்கப்பட்டுள்ள, தமிழ்நாடு சுற்றுலாதுறையின் அரங்கத்தை அமைச்சர் ராமச்சந்திரன் திறந்து வைத்துள்ளார். ஜெர்மன் தலைநகரான பெர்லின் நகரில் நடைபெற்று வரும். சர்வதேச சுற்றுலா சந்தையில்அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் அரங்கினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மார்ச் 7ம் தேதி அன்று திறந்து வைத்தார். மேலும், தமிழ்நாட்டின் சுற்றுலாத்தலங்களின் சிறப்புகளை ஜெர்மன் மொழியில் விளக்கங்களுடன் தெரிவிக்கும் புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் சந்தரமோகன், சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பாராம்பரியத்தை விளக்கும் வகையில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியினை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு மகிழ்ந்தனர். தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பாக தமிழ்நாட்டின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட அரங்கில், தமிழகத்தின் சுற்றுலா தொழில் முனைவோர்களான விடுதி மற்றும் உணவகம் நடத்துபவர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள் கலந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுற்றுலா ஏற்பாடு செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Tags : Tamil Nadu Tourism Hall ,Berlin ,Minister ,Ramachandran , Tamil Nadu Tourism Hall in Berlin: Minister Ramachandran inaugurated
× RELATED சர்வதேச சுற்றுலா சந்தையில்...