பேறுகாலத்துக்கு முன் விழிப்புணர்வை வழங்கும் புதிய கிளினிக்: பாலாஜி மருத்துவ கல்லூரியில் தொடக்கம்

சென்னை: பேறுகாலத்திற்கு முன்பு, அதுகுறித்த விழிப்புணர்வை வழங்குவதற்கான கிளினிக்கை,  பாலாஜி மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை தொடங்கி உள்ளது.  இதன் மூலம் பேறுகாலத்துக்கு முந்தைய பரிசோதனை, ஆய்வுகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகளை கருவுற்றப் பெண்களுக்கு, மார்ச் மாதம் முழுவதும் வழங்கப்படும்.  மகப்பேறியல் மற்றும் மகளிர் நோயியல், காது மூக்கு தொண்டை பிரிவு, கண் மருத்துவவியல், குழந்தை நலவியல் மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துறைகளைச் சேர்ந்த அனுபவம் மிக்க முதுநிலை மருத்துவர்கள் மருத்துவ ஆலோசனைகளை வழங்குவர். 044-42911000 அல்லது 9840885860 என்ற எண் மூலம் முன்பதிவு செய்யலாம். மேலும் இந்த மாதம், தேசிய தடுப்பூசி மருந்தளிப்பு கால அட்டவணையின்படி, குழந்தைப்பருவ தடுப்பூசி மருந்துகளையும் மற்றும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தைக்கான அத்தியாவசிய பொருட்கள் தொகுப்பையும் வழங்க உள்ளனர்.

பாலாஜி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மார்ச் மாதம் வழங்கப்படவிருக்கும் மகப்பேறுக்கு முந்தைய இலவச பராமரிப்பு சேவைகள் பற்றி மருத்துவர் குணசேகரன் கூறியதாவது, கருத்தரித்த காலம் முழுவதிலும் ஏற்பட வாய்ப்புள்ள உடல்நல பிரச்னைகள் வராமல் தடுக்கவும் மற்றும் அப்பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்கவும் மருத்துவர்களுக்கு உதவுகின்ற ஒரு முன்தடுப்பு பராமரிப்பு வழிமுறையாக மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு சேவைகள் இருக்கின்றன. நிதி பிரச்னைகளின் காரணமாகவும் மற்றும் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்வதால் கிடைக்கும் பலன்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லாததாலும் கணிசமான விகிதாச்சார பெண்கள், மகப்பேறுக்கு முன்பாக மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனைகள் செய்து கொள்வதில்லை.  பெண்களின் நலனுக்காக, அதுவும் குறிப்பாக ஏழ்மையான சமூகப் பொருளாதார பின்புலங்களைச் சேர்ந்த பெண்களுக்காக ஒரு மாத காலத்திற்கு மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு சேவைகள் முழுவதையும் இலவசமாக வழங்கவும் மற்றும் கருத்தரிப்பு காலத்தின்போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் பற்றி அதிக விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த இலவச கிளினிக்கை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: