ஐநா கூட்டத்தில் காஷ்மீர் பற்றி பாக். அமைச்சர் பேச்சு இந்தியா கண்டனம்: உள்நோக்கம் கொண்டது என விமர்சனம்

ஐநா: உலக மகளிர் தினத்தையொட்டி, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய பாகிஸ்தான் வௌியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ  சர்தாரி, தலைப்புடன் பொருந்தாத வகையில், ஜம்மு காஷ்மீர் பற்றி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், பிலாவல் பூட்டோவின் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருசிரா காம்போஜ் கூறியதாவது, “பெண்கள் அமைதி மற்றும் பாதுகாப்பு என்ற தலைப்புடன் தொடர்பில்லாமல், இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பற்றி பாகிஸ்தான் அமைச்சர் பிலாவல் பேசியது அடிப்படை ஆதாரமற்றது. அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதுபோன்ற பொய்யான, தீங்கிழைக்கும் விதமான பேச்சு பதில் சொல்வதற்கு கூட தகுதியற்றது. எங்கள் கவனம் முழுவதும் முன்னேற்ற பாதையை நோக்கிய நேர்மறை எண்ணத்துடன் இருக்கும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இன்றைய கலந்துரையாடலுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம்” என்று தெரிவித்தார்.

Related Stories: