உலக மகளிர் தினம் பெண்கள் சிறைகளில் கொண்டாட்டம்

சென்னை: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சிறைத்துறை டிஜிபி அம்ரேஷ் புஜாரி உத்தரவுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பெண்கள் தனிச்சிறைகள், பெண்கள் தனிக்கிளை சிறைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் சிறைவாசிகள் அரசு மற்றும் அரசு சாரா  தொண்டு நிறுவனங்கள் உதவியோடு பல்வேறு சிறப்பு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் அந்தந்த சிறைத்துறை துணை தலைவர்கள், கண்காணிப்பாளர்கள் முன்னிலையில் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் 816 பெண் சிறை வாசிகள் கலந்து கொண்டனர். அதில் வெற்றி பெற்ற பெண் சிறைவாசிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அனைத்து பெண்கள் தனிச்சிறைகள், தனிக்கிளை சிறைகளில் சிறப்பு உணவாக இனிப்பு, முட்டை, வெஜிடெபிள் பிரியாணி ஆகியவை தயார் செய்து வழங்கப்பட்டது.

Related Stories: