4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸி. பிரதமர் அல்பானிசுக்கு டிவிட்டரில் மோடி வரவேற்பு

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிசை டிவிட்டரில் வரவேற்றுள்ள பிரதமர் மோடி, இருதரப்பு பேச்சுவார்த்தைக்காக ஆவலுடன் இருப்பதாக கூறி உள்ளார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். நேற்று பிற்பகல் குஜராத்தின் அகமதாபாத் வந்தடைந்த அவர் அங்குள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இன்று பிரதமர் மோடியும், அல்பானிசும் அகமதாபாத்தில் நடக்கும் இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டியை பார்க்கின்றனர். தொடர்ந்து, மும்பை செல்லும் அல்பானிஸ், இரவு டெல்லிக்கு செல்கிறார்.  அல்பானிசை டிவிட்டரில் வரவேற்றுள்ள பிரதமர் மோடி, ‘‘உங்கள் வருகையை இந்தியா ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்தியா- ஆஸ்திரேலியா நட்புறவை மேம்படுத்த ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையை எதிர்நோக்குகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: